ரஜினிகாந்த் பாமகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாமக இளைஞரணத் தலைவர் அண்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக இளைஞரணித் தலைவர் அண்புமணி ராமதாஸ் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்த்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளவில்லை. டெல்லி சென்றாலும், மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசாமல் அவர்களது வழக்குகள் குறித்தே பேசுகின்றனர்.
1947 முதல் 2011-வரை தமிழகத்தின் கடன் 1 லட்சத்து ஒரு ஆயிரம் கோடியாக இருந்தது. அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அடுத்த 6 ஆண்டுகளில் அதனை 3¼ லட்சம் கோடியாக உயர்தியிருக்கிறது. இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் இதற்கு முக்கிய காரணம் .
ஜெயலலிதா இருக்கும்போது கொள்ளை நடைபெற்றது என்றாலும், அதில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், தற்போது முதலமைச்சராக இருப்பவரால் எந்த ஒரு அமைச்சரையும் கட்டுப்படுத்த இயலவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் பக்கம் 10 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு மிரட்டுகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் என்னை ஒரு சிறந்த நிர்வாகி என கூறியிருக்கிறார். எனவே ரஜினிகாந்த் பாமக-வுக்கு ஆதரவு தர வேண்டும். ஒரு நடிகரால் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டணத்துக்குரியது என்று கூறினார்.