கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை; நிறுத்தியது ஆந்திர அரசு!

கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆந்திர அரசு இன்று அறிவித்துள்ளது. 9 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இந்த அணை கட்டப்பட இருந்தது. குறிப்பாக ரூ.2 லட்சம் செலவில் அடிமட்டமும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரு மாநில அதிகாரிகளின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தடுப்பணை கட்டுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. பேச்சுவார்ததையில் சுமூகமான முடிவு எட்டப்பட்ட பின்னர் தொடர்ந்து கட்டுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கொசஸ்தலை கிளை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்த வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர அரசிடம் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close