விலங்கு வதை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மாநில அரசு ஒரு எஸ்.பி.யை மாநில நோடல் அதிகாரியாக நியமித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவுத் தலைவர் டி.சண்முக பிரியா, மாநிலத்தின் நோடல் அதிகாரியாக இப்போது பொறுப்பேற்கிறார். பதிவு செய்யப்படும் அனைத்து புகார்கள் மற்றும் வழக்குகளை விசாரிக்க அவர் பிரிவு அதிகாரிகளை நியமிப்பார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை, இது போன்ற பிரச்சனைகளில் பணிபுரியும் விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க அனுமதித்த போதிலும், இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் ஈடுபாடு இல்லாததுதான் விலங்குநல ஆர்வலர்களின் பொதுவான புகாராக இருந்தது.
உதாரணமாக, சமீபத்தில் வேலூரில் கால்நடை மருத்துவர் ஒருவர் வளர்ப்பு நாயைக் கொன்ற வழக்கில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர், எனவே நாயின் பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை. மற்றொரு வழக்கில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரிசார்ட்டுக்குள் 5 நாய்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்த வழக்கில் தெரு நாய்களுக்கு உணவளித்த மாணவியின் பெற்றோரை உள்ளூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் ஸ்ருதி வினோத் ராஜ் ஆங்கில நாளிதழ் அளித்த பேட்டியில் கூறுகையில், விலங்குகள் துன்புறுத்தல் வழக்குகளுக்கு இதுபோன்ற உதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை. நாங்கள் ஸ்டேஷனுக்குச் செல்லும்போது, காவல்துறையினர் மற்ற குற்றங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுவதால், விலங்குகள் வன்கொடுமை வழக்குகளை அவர்கள் பொதுவாக பெரிதாகக் கருதுவதில்லை.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வாரியம் 56 வழக்குகளைப் பெற்றுள்ளது, அவற்றில் சுமார் 24 வழக்குகளுக்கு காவல்துறை உதவி தேவைப்படுகிறது. இருப்பினும், இரண்டு அல்லது மூன்று வழக்குகளில் மட்டுமே போலீசார் குற்றவாளிகளை பதிவு செய்தனர்.
விலங்குகள் நலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் இருந்து பல விலங்கு சட்டங்கள் மற்றும் முக்கிய தீர்ப்புகள் உள்ளன, அவை களத்தில் உள்ள போலீசாருக்கு தெரியவில்லை.
மேலும் சண்முக பிரியா பேசுகையில், விலங்குகள் துன்புறுத்தல் அதிகரித்து வருவதால், இதுபோன்ற வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து காவல்துறையினருக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிப்பதே தனது முதல் படியாக இருக்கும்.
தெருநாய்கள் மற்றும் பூனைகள் கொல்லப்படுவதால், 1960-ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், அத்துடன் விலங்குகளை காயப்படுத்துவதைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளான 428 மற்றும் 429 போன்ற பிரிவுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்போம் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“