Advertisment

"இதனால் போக்குவரத்து துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள்"- மகளிர் இலவச பேருந்து பயணத்தை பற்றி ஸ்டாலின் பேச்சு

"பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய ஏழு இலக்குகளோடு எங்கள் பயணம் அமையும் என்று குறிப்பிட்டோம்"- முதல்வர் ஸ்டாலின்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MKStalin

MKStalin

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் 'ஏற்றமிகு ஏழு திட்டங்கள்' தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

Advertisment

publive-image

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், அறிஞர் அண்ணா குறித்து முன்னாள் முதலமைச்சரான கலைஞர் எழுதிய பாடலை சுட்டிக்காட்டி தனது உரையை தொடங்கினர்.

பிறகு, "திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைப்பதற்கு முன்பு, திருச்சியின் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினோம். பொதுக்கூட்டம் என்று சொன்னால், அது அரசியல் காரணங்களுக்காக கூட்டப்பட்ட வழக்கமான பொதுக்கூட்டம் அல்ல; திமுக ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கி தருவோம் என்பதற்கான முழுமையான திட்டமிடுதலாக அந்த கூட்டத்தில் கூறியிருந்தோம்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே திட்டமிட்டு சொன்னோம்.

வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, மகசூல் பேருக்கும் மகிழும் விவசாயி, குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், அனைவருக்கும் அனைத்துமாக தமிழ்நாடு, எழில்மிகு மாநிலங்களின் மாநிலம், உயர்தர ஊடக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம், ஆகியவை அந்த உறுதிமொழிகள் ஆகும்.

ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்று மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. பொருளாதாரம், வேளாண்மை, குடிநீர், கல்வி, நகர்ப்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி ஆகிய ஏழு இலக்குகளோடு எங்கள் பயணம் அமையும் என்று குறிப்பிட்டோம்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்தை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டு இருக்கிறோம். எங்களது வளர்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும்போது, முதன்முதலாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்புடன் ஆலோசனை நடத்தினேன். அதில் மிக முக்கியமான ஆலோசனை தான், மக்களிற்கான கட்டணமில்லா பேருந்து வசதி ஆகும்.

இந்த திட்டத்தை அறிவித்தால், ஏற்கனவே நலிவில் இருக்கக்கூடிய போக்குவரத்து துறையின் வருமானம் குறையும் என்று சொன்னார்கள்; ஆனால் இதனை அறிவித்தால் லட்சக்கணக்கான மகளிர் வாழ்க்கையில் மலர்ச்சி ஏற்படும் என்று நான் கூறினேன். முதல்வராக பதவி ஏற்ற உடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு தான்.

இந்த நாள் வரை, பெண்கள் 236 கோடி பயணங்கள் பெண்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலமாக, பெண்களுடைய பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அவர்களுடைய சமூக பங்களிப்பு அதிகரித்து வருகிறது.

இன்றைய தினத்திற்கு, இந்த திட்டம் நமது ஆட்சிக்கு மிகப்பெரிய பெரும் புகழும் பெற்றுத்தரும் அளவுக்கு அமைந்திருக்கிறது. இதுபோல, மகளிருக்கான எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

இரண்டாவதாக, கொரோனா பெருந்தொற்று காலங்களில், பல குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது; அதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4,000 வழங்க கையெழுத்து போட்டேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது மிகப்பெரிய பேருதவியாக அமைந்தது.

இந்த வரிசையில், இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் கொண்டுவரப்பட்டது 'நான் முதல்வன்' திட்டம்.

எங்கள் ஆட்சிக்கு பிறகு, ஏராளமான தொழில் நிறுவனங்களை சார்ந்து இருக்கக்கூடிய முதலீடுகள் வந்து சேர்ந்தது.

அப்போது, பல தொழிலதிபர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கினாலும் அதில் பணியாற்ற இளைஞர்கள் கிடைப்பதில்லை என்று தொழிலதிபர்கள் சிலர் என்னிடத்தில் குறிப்பிட்டு சொன்னார்கள்.

அதை கருத்தில் கொண்டு, எழபட்ட திட்டம் 'நான் முதல்வன்' திட்டமாகும். தமிழ்நாடு இளைஞர்களை கல்வி, அறிவாற்றல், சிந்தனை திறனில், பன்முக ஆற்றலில் முன்னேற்றுவதற்காக, கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி வைத்தோம்.

இந்த ஒரு ஆண்டு காலத்தில், 1,300க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை- அறிவியல் கல்லூரிகளை சார்ந்து இருக்கக்கூடிய, 17 லட்சத்திற்கும் அதிகமான திறமைசாலிகள் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

உலகில் முதன்மையானவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை மாற்றுவதற்காக, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், வருகின்ற நாட்களில் திமுக அரசு 2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை பெற்றுள்ளது.

ரூ.49,385 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களே கழிவுகளை அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, டி.ஐ.சி.சி.ஐ., உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடியாக நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தூய்மை பணிகளில் ஈடுபடும் பல பணியாளர்கள், சந்திக்கிற ஆபத்துக்களால் உயிரிழக்கும் நிகழ்வுகள் அரங்கேறுகிறது.

இதை சரிசெய்யும் வகையில், பாதாள சாக்கடை பராமரிப்பு திட்டம் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகளை நவீன இயந்திரங்கள் மூலமாக மேற்கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலுமாக தவிர்க்க திட்டமிட்டுள்ளோம்", என்று கூறினார்.

Tamil Nadu Chennai Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment