அண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா

Anna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு வழக்கில் பேராசிரியர்கள் இல்லத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ்

Anna University exam scam : அண்ணா பல்கலைகழக தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்தும் விஜயகுமார் நீக்கம். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா, முதல் தகவல் அறிக்கை அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

Anna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு:

அண்ணா பல்கலைகழகம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வுகளில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதாவது தேர்ச்சி பெறாத மாணவர்களை தேர்ச்சி பெற வைப்பதற்கும், நடந்து முடிந்த தேர்வு மறுக்கூட்டலிலும் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதற்கா பாடம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்று மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பான புகாரை விசாரித்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அலுவலர் உமா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விவகாரம் தொடர்பான சோதனைகள் நடைபெற்றது. வழக்கு பதிவு செய்யப்பட்ட அலுவலர் உமா, திண்டிவனத்தில் உள்ள விஜய குமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்களது அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு குறித்த கூடுதல் செய்திக்கு:

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உமா வீட்டில், வழக்கு தொடர்பான ஆவணங்களும், அசையா சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் மட்டுமே சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட பல ஆசிரியர்களின் வீடுகள் பிற மாவட்டங்களில் உள்ளதால் அங்கும் சோதனை மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது.

இதன் அடிப்படையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியுடன் திண்டி வனம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் திண்டிவனம் அரசு மருத்துவமனை பின் புறம் உள்ள விஜயகுமார் வீடு, திண்டிவனம் மயிலம் சாலை இந்திராநகரில் உள்ள சிவக் குமார் வீடு ஆகிய இடங்களிலும் 3 குழுவாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், விஜயகுமார் வீட்டில் இருந்து 64 முக்கிய ஆவணங்களையும், உதவி பேராசிரியர் சிவக்குமார் வீட்டில் இருந்து 14 ஆவணங்கள் என மொத்தம் 78 முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

Anna University exam scam : அண்ணா பல்கலைகழகம் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை:

இந்நிலையில், அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியுள்ளதால், அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். இவரின் இடைநீக்கத்தை தொடர்ந்து, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்தும் விஜயகுமார் நீக்கப்பட்டார்.

Anna University exam scam : அண்ணா பல்கலைகழக தேர்வு முறைகேடு குறித்து பல்கலைகழக துணைவேந்தர் பேட்டி:

அண்ணா பல்கலைகழக தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.

anna university , அண்ணா பல்கலைகழகம்

அண்ணா பல்கலைகழகம் பல்கலைகழக துணைவேந்த சூரப்பா

அப்போது பேசிய அவர், “தேர்வு முறைகேடு குறித்து விரிவான, வெளிப்படையான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அனைவரின் ஒத்துழைப்புடன் விசாரணை நடைபெறுகிறது. இதில் மொத்தம் எத்தனை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஆனால் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் பெரிய நெட்வர்க் உள்ளது. அனைவரும் நேர்மை, நியாயம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.

வழக்கின் ஒவ்வொரு கோப்புகளையும் கவனமாக பரிசீலித்து, தேவைப்பட்டால் அவர்களை தனியாக அழைத்து விசாரிக்கிறேன். இந்த விவகாரத்தில் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்மந்தப்பட்டவர்கள் மீதான் நடவடிக்கை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையின் அடிக்கபடையிலேயே எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும்” என்றார்.

பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில், சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 50 மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close