scorecardresearch

ஜி ஸ்கொயர் முன்னேற்றக் கழகம்… ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை!

தமிழக கர்ப்பிணிகளுக்காக தரம் குறைவான பொருளான Pro-Pl Health Mix வழங்குவதை கண்டித்தும், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் கீழ் நடக்கும் ஊழலை பற்றியும் செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் பாஜக தலைவரான அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலம் ஆகியிருக்கிறது. அனைத்திடத்திலும் மக்களிடையே திராவிட மாடலை தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் லஞ்சம் ஊழல் அனைத்திடத்திலும் தலைவிரித்து ஆடுகிறது என்கிற ஒரு குற்றசாட்டை பாரதிய ஜனதா கட்சி வைத்திருந்தது. பல இடங்களில், முதல்வர் இதை சரிசெய்வதாக சொல்லியிருந்தாலும், இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதில் பல அமைச்சர்களுக்கும் அல்லது முதல்வருடைய குடும்பத்திற்கும் கூட நிறைய தொடர்பு இருப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

நம் மாநிலத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ‘அம்மா நியூட்ரிஷன் கிட் ‘ என்பதை பலகாலமாக நமது அரசாங்கம் குடுத்து வருகிறது.  இந்த ‘அம்மா நியூட்ரிஷன் கிட்’இல்  தாய்மார்களுக்கான ஹெல்த் மிஃஸ், மாத்திரை, பிளாஸ்டிக் கப், டவல், ஆவின் நிறுவனத்தின் நெய், பேரிச்சம்பழம் ஆகியவை இருக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்தபின்பு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, கற்பிணிகளுக்கான ஹெல்த் மிஸ்ஸை செம்மை படுத்தவேண்டும் என்று முயற்சித்தனர். இதற்காக பல்வேறு கலந்துரையாடல் சந்திப்புகளை மார்ச் மாதம்  நிகழ்த்தினர். 

இந்த கலந்துரையாடலில், நியூட்ரிஷன் கிட்டில் வைத்திருந்த Pro-Pl Health Mix வைப்பதை தவிர்த்து, ஆவின் நிறுவனத்தின் ஹெல்த் மிஸ் பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இரண்டு வருடங்களுக்கு சேர்த்து தமிழ்நாட்டிற்காக அரசாங்கம் இருபத்திமூன்று லட்சத்தி எண்பத்தி எட்டாயிரம் கிட் வாங்குகிறார்கள். இதைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், அரசின் நிர்பந்தத்தின் காரணமாக இந்த முடிவு மாற்றப்பட்டது.

Pro-Pl Health Mix என்பது ஆவின் நிறுவனத்தின் பொருளை விட 60% விலை அதிகம். நியூட்ரிஷன் கிட்டில் வழங்கக்கூடிய 8 பொருட்களையும் விநியோகிக்கும் நிறுவனம் Anita Texcot ஆகும். இதே நிறுவனம் தான் பொங்கல் தொகுப்பை மாநில அரசுக்கு விநியோகித்தது.

இதற்கு பொறுப்பாக இருப்பவர்கள் திமுகவினுடைய ஆடிட்டர் சண்முகராஜ், அண்ணாநகரில் இருக்கக்கூடிய திமுக எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் ஆகியோர், முதலமைச்சர் செகிரேட்டரி வைத்து பொது சுகாதாரத்துறையின் உறுப்பினர்களை மிரட்டி அவர்களின் முடிவை மாற்ற செய்துள்ளனர். ஆவின் பொருளை நீக்கி Pro-Pl Health Mix கொண்டு வந்ததால் அரசிற்கு 45 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாங்கம் ஐயன் சிரப்பை 42 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். ஆனால் Anita Texcot விநியோகிக்கிற ஐயன் சிரப்பின் விலை 224 ரூபாய். இதனால், மாநில அரசிற்கு 32 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த டெண்டர் இன்னும் துவங்கவில்லை, துவங்குவதற்கு முன்பே மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறுகிறார்.

ஜி ஸ்கொயர்:

மற்ற காண்ட்ராக்ட்டை விட ஜி ஸ்கொயருக்கு நிதி மிக விரைவாக வழங்கப்பட்டது. பொதுவாக ஒரு நிறுவனத்திற்கு நிலம் ஒப்புதல் வழங்க ஏறக்குறைய 200 நாட்கள் ஆகும். ஆனால், கோவையில் 125 ஏக்கர் நிலத்திற்கு 8 நாட்களில் DDCP, மத்திய அரசின் ரேரா உட்பட அனைத்து துறையின் அனுமதியும் கிடைத்துள்ளது. முதல்வரின் உறவினர்கள் பலரும் ரேரா கிரடாய் அமைப்புகளில் வந்துவிட்டனர்.

தற்போது ஜி ஸ்கொயரின் விளம்பரங்களை எல்லா செய்தித்தாள்களிலும் பார்க்கமுடியும். இந்த நிறுவனத்தின் பெயர் வெளியே தெரியவந்ததால் தற்போது 6 புதிய நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். இதில் முதல்வரின் மருமகன் சபரீசன், மகள் செந்தாமரை மற்றும் கார்த்திக் தலைமை இயக்குநராக உள்ளனர். 

அமைச்சர் முத்துசாமி ஏன் இந்த நிறுவனத்திற்கு கடந்த ஓராண்டாக ஆதரவு அளித்தார் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்று கூறுகிறார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Annamalai releases g square and nutrition kit corruption list