Advertisment

தி.மு.க தொடர்ந்து சீண்டினால் ஆளுனர் அமைதி காப்பார் என கூற முடியாது: அண்ணாமலை

மேற்குவங்கம் கேரளாவை போல் ஆளுனர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும். என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Tamil news

Annamalai K

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்துசமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பில் 19வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

Advertisment

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், “சட்டமன்றத்தில் காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும் ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்துமக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றிபெற்றுசென்ற காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் இந்துமக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும்வரை பிரச்சினையை விடபோவதில்லை.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாக இடை தேர்தல் நடத்த திமுக அரசு அவசரப்படுகிறது.

மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகாவிற்கு இல்லை.

தனியார் துறையில் ஆண்டிற்கு பத்துலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கபடும் எனவும் அரசுதுறையில் 3.5லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கபடும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

திமுக ஆட்சிக்குவந்து 20 மாதங்கள் ஆகியுள்ளன. மொத்த ஆட்சியில் 3ல்ஒரு பங்கு முடிந்துள்ள நிலையில் இதுவரையிலும் வேலைவாய்ப்புகளை வழங்கபடவில்லை.

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வு நடைபெற்று ஆறு மாதங்களாகியும் அதன் முடிவுகளை வெளியிடாத அரசு எப்படி வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும்.

திமுக வுக்கும் எப்போதும் எதிரி வேண்டும் திரைப்பட அரசியல் படி திரைபடத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் திமுக அரசு ஆளுனரை வில்லனாக சித்தரிக்கிறது.

ஆளுனரை வைத்து அரசியல் செய்வதாகவும் ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை.

திமுக ஆளுனரை சீண்டிவருகின்றனர். மேற்குவங்கம் கேரளாவை போல் ஆளுனர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும்.

தொடர்ந்து ஆளுநரை திமுக சீண்டிக்கொண்டிருந்தால் ஆளுநர் அமைதி காப்பாரா என்பதை கூற இயலாது.

2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும் திமுகாவை போல் சந்தர்பவாத கூட்டணி அமைக்காது பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே புதிய கல்வி கொள்கை மும்மொழிக் கொள்கை எனப் பிரச்சினை இருக்கதான் செய்கிறது. எனினும் ஒரே கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைக்கபடும்” என்றார்.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment