Advertisment

செந்தில் பாலாஜி கைது எல்லாம் சும்மா… அடுத்து இந்த அமைச்சர் தான் – அண்ணாமலை பகீர்

செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான். அடுத்த இந்த அமைச்சருக்கு நடப்பதை மட்டும் பாருங்கள். ஆனால் குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கு சம்மந்தம் இல்லை – அண்ணாமலை

author-image
WebDesk
New Update
TN BJP chief Annamalai yatra plan from Rameswaram Tamil News

அண்ணாமலை

செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான். அடுத்ததாக இன்னொரு அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் சத்தியமாக அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ’என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தை ஜூலை 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார். ராமேஸ்வரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, வெள்ளிக்கிழமை மதுரை மாவட்டம் மேலூரில் நடைபயணம் மேற்கொண்டார்.

இதையும் படியுங்கள்: மதுரை- தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிட முடிவா? அன்புமணி எதிர்ப்பு

மேலூரில் பொதுமக்கள் முன் உரையாற்றிய அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாயையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். இந்த மாயையில் அகப்பட்டு கிடக்கும் மக்களை மீட்பதே பாத யாத்திரையின் நோக்கம். தமிழ்நாட்டில் நேர்மையான மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான்.

ஆனால், தற்போதுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, கக்கனுக்கு நேர் எதிரானவராக உள்ளார். செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவ மனைக்கு மாற்றுகிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள் யாரும் சரியில்லையா? அமலாக்கத்துறைக்கு பயந்து செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக உள்ளார்.

தி.மு.க ஆட்சி கொள்ளையடிக்க கூடிய ஆட்சியாக உள்ளது. ஏழைக் குடும்பங்களைத்தான் டாஸ்மாக் பாதிக்கிறது. மக்கள் குடிக்க வேண்டும் என்றால் கல்லுக்கடை திறந்துவிடலாம். கடன் வாங்குவதிலும் டாஸ்மாக்கிலும் தான் தமிழகத்தை முதல் மாநிலமாக உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது.

மத்திய அரசு பணத்தை எடுத்து ரூ.1000 மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்கள். மதுரை தொகுதியின் எம்.பி. வெங்கடேசன், விளம்பரங்களிலும், புத்தக வெளியீட்டு விழாவிலும் மட்டும் தான் இருக்கிறார்.

அமைச்சர் மூர்த்தியை பற்றி என்ன சொல்வது.... மூர்த்தியை பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை. எத்தனை குவாரி உடைக்க போகிறார் என்பது அவருக்குதான் தெரியும். செந்தில் பாலாஜி உள்ளே போனது எல்லாம் சும்மாதான். மூர்த்தி அண்ணனுக்கு நடப்பதை மட்டும் பாருங்கள். நான் ஏதாவது சொல்லி நடந்து விட்டால் பிறகு அண்ணாமலை சொல்லித்தான் நடந்து விட்டது என்பார்கள். சத்தியமாக எனக்கும் அதற்கு சம்மந்தம் இல்லை. குலதெய்வம் மீது ஆணையாக எனக்கும் அதற்கு சம்மந்தம் இல்லை.

கன்னியாகுமரி வரை ராகுல் காந்தி மாஸ் என்றும், கேரளா சென்று விட்டால் ராகுல் காந்தி டம்மி எனவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Dmk Madurai Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment