Advertisment

அவசியமற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள்: சென்னை போலீஸ் வேண்டுகோள்

சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் கவனத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
அவசியமற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள்: சென்னை போலீஸ் வேண்டுகோள்

சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

Mandous Cyclone News: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல், நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று இன்று சென்னைக்கு 260 கிலோமீட்டர் தென்- தென்கிழக்கே நிலைகொண்டுள்ளது. இன்று இரவு கரையை கடக்கும் நிலையில் உள்ளதால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு எல்லோ அலெர்ட் மற்றும் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் போக்குவரத்து காவல்துறை பொதுமக்கள் கவனத்திற்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் அவர்கள் கூறியதாவது: "மாண்டஸ் புயலின் காரணமாக காற்றுடன் கூடிய மழைப் பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மிக அவசியமானக் காரணங்களுக்காக மட்டுமேப் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுமாறுப் போக்குவரத்துக் காவல்துறைச் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவசியத் தேவைகளுக்கானப் பயணம் மேற்கொள்பவர்கள் இருச் சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள நேர்ந்தால் குடை உபயோகிப்பதைத் தவிர்த்து மழை அங்கி அணியலாம்.

மேலும் மழைக்காக ஒதுங்க நேரிட்டால் மரங்கள் பழுதடைந்தக் கட்டிடங்கள் விளம்பர போர்டுகள் மின்மாற்றிகள் ஆகியவற்றின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்க்கவும்", என்று அறிவித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Greater Chennai Corporation Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment