Raid : முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினார்கள்.
சென்னையில் 16 இடங்களிலும, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில் ஒரு இடத்திலும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
தி.நகர் சத்தியா, சென்னை தியாகராய நகர் தொகுதியில் கடந்த 2016 முதல் 2021 வரை எம்எல்ஏ ஆக இருந்தார். அப்போது தேர்தல் வேட்புமனு பத்திரத்தில், “தனக்கு ரூ.2.77 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று அவரது நண்பர் மற்றும் அவரது வீடுகளில் சோதனை நடந்துள்ளது. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சத்யா, சென்னையில் சைக்கிள் கடை மூலம் தனது வாழ்க்கையை தொடங்கியவர் எனக் கூறப்படுகிறது.
இவர் 1990-91 காலகட்டத்தில் செங்கோட்டையனிடம் நெருக்கமாகி அதிமுக கட்சியில் இணைந்தார். சமீபத்தில் நடந்த மதுரை எழுச்சி மாநாட்டுக்கு சென்னையில் இருந்து தொண்டர்களை சிறப்பு ரயிலில் அழைத்துச் சென்றது இந்த திநகர் சத்யா மற்றும் ஆர்.எஸ் ராஜேஷ் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“