கலாம் சிலையருகே வைக்கப்பட்ட பைபிள் மற்றும் குரான் நூல்கள் அகற்றம்!

இந்த சர்ச்சையை அடுத்து அப்துல் கலம் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் நூல்களையும் வைத்தார் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம்.

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போல இருக்கும் சிலை அருகே பகவத் கீதை வைத்திருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சர்ச்சையை அடுத்து அப்துல் கலம் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் நூல்களையும் வைத்தார் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம். ஆனால் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பைபிள் மற்றும் குரான் நூல்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இது தொடர்பாக வைகோ தெரிவித்தபோது: தமிழ் மொழி, தமிழ் உணர்வு, அழிக்க இந்துத்துவா சக்திகள் முயல்கின்றன. அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், அங்கு அப்துல் கலாம் வீணை வாசிப்பது போன்று சிலை எதற்கு வைக்கப்பட்டுள்ளது? அதில் பகவத் கீதை வைக்கப்பட்டுள்ளது எதற்கு? திருக்குறனைவிட சிறந்ததா பகவத்கீதை என்று கேள்வி எழுப்பினார்.

கலாமின் சிலை அருகே சீக்கியம், புத்தம், சமணம் உள்ளிட்ட நூல்களை வைக்க முடியுமா? சமைய சார்பில்லா திருக்குறளை அப்துல் கலாம் சிலை அருகே வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் எந்தவித சர்ச்சையும் எழுந்திருக்காது என்று கூறினார்.

இதேபோல திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தபோது: பாஜக செய்துவரும் மதவாத பிரச்சாரங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரைபேர அரசு அடிபணிந்து போவது வெட்கப்பட வேண்டியது என்று கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் கூறும்போது: அப்துல் கலாம் சிலை அருகே பகவத் கீதை மட்டும அவரது உணர்வுகளை மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அப்துல்கலாமை அதீதிவிர இந்துத்துவா பற்றாளராக காட்டும் வகையில் இது அமைந்துள்ளது. எனவே, அந்த இடத்தில் இருந்து பகவத்கீதையை அகற்ற வேண்டும் என்று கூறினார்.

இந்த சர்ச்சையை அடுத்து, அப்துல் கலம் சிலை அருகே பைபிள் மற்றும் குரான் நூல்களையும் வைத்தார் அப்துல் கலாமின் அண்ணன் பேரன் சலீம். ஆனால், அப்துல் கலாமின் சிலை அருகே பைபிள் மற்றும் குரானை வைத்தது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அப்துல் கலாம் அண்ணன் பேரன் சலீம் மீது இந்து மக்கள் கட்சியினர் தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பகவத்கீதை அருகே குரானை வைத்ததன் மூலம் இந்து மதத்தை அவமதிப்பு செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பகவத் கீதை அருகே வைக்கப்பட்டிருந்த பைபிள் மற்றும் குரான் ஆகியவை அங்கிருந்து அகற்றப்பட்டன.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close