மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது

விண்ணப்பங்கள் ஜூலை 7ம் தேதி வரையில் வழங்கப்படும். ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நிரப்பி, ஒப்படைக்க வேண்டும்.

மருத்துவப் படிப்புகான விண்ணப்ப விநியோகம் இன்று காலை தொடங்கியது.

தமிழகம் முழுவது உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை சென்னை மருத்துவ கல்வி இயக்கம் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டது.

விண்ணப்பங்கள் ஜூலை 7ம் தேதி வரையில் வழங்கப்படும். ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நிரப்பி, ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்கத்துக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட 3050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 15 சதவிகித இடங்கள் மத்திய அரசுக்கு ஓதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள இடங்களை மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவிகிதமும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 15 சதவிகிதம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close