மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி திமுக அரசு நடத்திவருகிறது. இதை முன்னிட்டு நூலகம், மருத்துவமனை உள்ளிட்டவை சார்ந்த திட்டங்களும், மாநிலம் முழுவதும் கருணாநிதிக்கு சிலை வைக்கும் திட்டத்தையும் முன்னெடுத்து வருகிறது.
Advertisment
இந்த நிலையில் கனிமொழி கருணாநிதி வினாடி-வினா போட்டி நடத்தவுள்ளார். இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை @KanimozhiDMK முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் கழக மகளிரணி சார்பில் தங்கை @KanimozhiDMK முன்னெடுக்கும் #கலைஞர்100-இல் வினாடி - வினாப் போட்டி முயற்சி பாராட்டத்தக்கது. செப்டம்பர் 15-ஆம் நாள் தொடங்கவுள்ள உள்ள #Kalaignar100quiz வினாடி வினாப் போட்டிக்கு இப்போதில் இருந்தே தயாராகுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இந்தப் போட்டிகள் 10 ஆயிரம் கேள்விகளோடு 18 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேலானவர்களுக்கு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக நடக்கின்றன. kalaingar100.co.in என்ற இணையதளத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று இணையவழி போட்டிகள் நடைபெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“