ஏப்ரல் 3 மற்றும் 11ம் தேதிகளில் முழு கடையடைப்பு - வெள்ளையன் அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரில் 3 மற்றும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் அறிவிப்பு.

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வணிகர் சங்கம் சார்பில் ஏப்ரல் 3ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஏப் 5 ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் தேர்வு காரணமாக அனைத்துக்கட்சிகளுடன் இணைந்து வணிகர் சங்கம் இந்தப் போராட்டத்தை ஏப்ரல் 5ம் தேதி நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

ஸ்டாலினின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அனைத்துக்கட்சிகளுடன் இணைந்து வணிகர் சங்கம் போராட்டத்தை நடத்தாது என்றும், திட்டமிட்டபடி ஏப்ரல் 3ம் தேதியே முழு அடைப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் கூடுதலாக மோடியின் தமிழக வருகையை எதிர்க்கும் விதமாக ஏப்ரல் 11ம் தேதியும் முழு கடையடைப்பு நடைபெறும் என்று வெள்ளையன் அறிவித்தார்.

தமிழகத்தின் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தமிழகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ மற்றும் கூடன்குளம் போன்ற திட்டங்களையே மத்திய அரசு செயல்முறைப்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டினார். மேலும் இத்திட்டங்களை எதிர்த்தும் இந்த முழு அடைப்பு போராட்டங்கள் நடத்த முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

×Close
×Close