வண்டலூர் பூங்கா தீபாவளிக்கு வழக்கம்போல திறந்திருக்கும்

தீபாவளி பண்டிகையின் போது வண்டலூர் பூங்கா வழக்கம்போல திறந்திருக்கும் என வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தகவல்

தீபாவளி பண்டிகையின் போது வண்டலூர் பூங்கா வழக்கம்போல திறந்திருக்கும் என வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தகவல்

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arignar Anna Zoological Park,Vandalur zoo, Diwali,

தீபாவளி பண்டிகையின் போது வண்டலூர் பூங்கா வழக்கம்போல திறந்திருக்கும் என வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னை வண்டலூரில் உள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு சிங்கம், புலி, கரடி, குரங்கு, மான்கள் என விலங்குள் மற்றும் அரிய வகை பறவைகள் உள்ளன. எனவே, வண்டலூர் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

Advertisment

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் வண்டலூர் பூங்காவிற்கு ஏராளமானோர் சென்றிருந்தனர். ஆனால், வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருந்ததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய் கிழமை வார விடுமுறையாகும். ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் பண்டிகை ஏதேனும் வந்தால், வண்டலூர் பூங்கா திறந்திருக்கும். எனினும், தீபாவளி பண்டிகைக்கு பூங்கா திறந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: