அரிசியை சாப்பிட்டதால், உடல் எடை அதிகமாக இருந்த அரிக்கொம்பன் யானை, வனப்பகுதியில் உள்ள புற்களை சாப்பிடுவதால் உடல் எடை மெலிந்து காணப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கனல், சந்தன்பாறை பகுதிகளில் விளைநிலங்களில் புகுந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானை, கடும் சேதத்தை விளைவித்தது. வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளை தாக்கி சேதப்படுத்தியது. 20 பேரை கொன்றுள்ள அரிகொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, காடுக்குள் விடப்பட்டது.
தேனி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் யானை, கடந்த ஜூன் 5ம் தேதி கோதையார் வனப்பகுதியில் விடப்பட்டது. அரிக்கொம்பன் யானை உடல் மொலிந்த நிலையில் காணப்படுவதாக தகவல் வெளியானது. அரிசியை சாப்பிட்டதால் உடல் உப்பிய நிலையில் இருந்த அரிகொம்பன், தற்போது வனப்பகுதியில் உள்ள புற்களை சாப்பிடுவதால் மெலிந்த தோற்றத்திற்கு மாறியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரேடார் கருவி மூலம் அரிகொம்பனை வனத்துறையினர் கண்காணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. அம்பை மற்றும் களக்காடு என ஒரு கோட்டத்தை சேர்ந்த வனத்துறையினரும் தொடர்ந்து அரிக்கொம்பனை கண்காணித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“