/tamil-ie/media/media_files/uploads/2017/09/Z338.jpg)
தமிழ் சினிமாவில் 200 படங்களுக்கும் மேல் கலை இயக்குனராக பணியாற்றியுள்ள ஜிகே எனும் கோபி கிருஷ்ணா நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 60.
இருதய பிரச்சனை காரணமாக கடந்த 14.9.17 அன்று மதியம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு காலமானார். கோபி கிருஷ்ணாவுக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், கிருஷ்ணா என்ற ஒரு மகனும் ஹேமச்சந்திரா என்ற ஒரு மகளும் உள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' படத்திற்காக பிரம்மாண்ட செட் அமைத்ததற்காக சிறந்த கலை இயக்குனருக்கான மாநில அரசின் விருதினை கோபி கிருஷ்ணா வென்றுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். அதுதவிர சில திரைப்படங்களிலும் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள வீட்டில் கோபி கிருஷ்ணாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.