கமல்ஹாசனின் கட்சிக் கூட்டம் : அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு

நாளை நடைபெற இருக்கும் கமல்ஹாசனின் கட்சிக் கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.

நாளை நடைபெற இருக்கும் கமல்ஹாசனின் கட்சிக் கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார்.

ட்விட்டரிலும், ‘பிக் பாஸ்’ மேடையிலும் அரசியல் பேசிவந்த கமல்ஹாசன், நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். நாளை (புதன்கிழமை) கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல்ஹாசன், கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்துகிறார். அத்துடன், கட்சியின் கொள்கைகள் குறித்தும் விளக்குகிறார். இந்தக் கூட்டத்தில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். அத்துடன், கமல்ஹாசனின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீடியோ வாழ்த்து அனுப்பியுள்ளார்.

நாளை கமல்ஹாசன் எங்கெங்கு செல்கிறார்? முழு விவரப் பட்டியல் இதோ…

காலை 7.45 : ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இல்லத்துக்கு வருகிறார்.

காலை 8.15 : ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார்.

காலை 8.50 : கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்திக்கிறார்.

காலை 11.10 : ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்துக்கு வருகிறார்.

காலை 11.20 : ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து மதுரைக்கு கிளம்புகிறார்.

நண்பகல் 12.30 : ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம்.

பிற்பகல் 2.30 : பரமக்குடி ஐந்து முனை சாலையில், லேனா மஹாலுக்கு சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம்.

பிற்பகல் 3 : மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்.

மாலை 5 : மதுரை வருகிறார். (ஒத்தக்கடை மைதானம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எதிரில்)

மாலை 6 : கட்சிக்கொடி ஏற்றுகிறார்.

மாலை 6.30 : பொதுக்கூட்டம்

இரவு 8.10 முதல் 9 வரை : கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.

×Close
×Close