நபார்டு வங்கியில் பணி : பி.இ., பிஎஸ்சி பட்டதாரிகளே விரைவீர்

நபார்டு வங்கியில் கிரேடு ஏ பணியிடங்களுக்காக தகுதியான பி.இ., பி.எஸ்.சி பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நபார்டு என்று அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் கிரேடு ஏ பணியிடங்களுக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 79

பணியின் பெயர் : உதவி மேலாளர் (Grade A)

துறைவாரியாக பணியிடங்களின் எண்ணிக்கை
பொது -41
பால் தொழில்நுட்பம் – 05
பொருளாதாரம் மற்றும் வேளாண் பொருளாதாரம் -07
சுற்றுப்புறவியல் -04
உணவு பதப்படுத்துதல் – 03
வனவியல் -03
நிதி -07
நில மேம்பாடு – மண் அறிவியல் -05
தோட்டக்கலை மற்றும் வளர்ப்பு -03

கல்வித்தகுதி

Forestry, Veterinary sciences, Animal husbandary, Dairy technology, Economics, Agriculture economics, Environmental science, Environmental engineering, Food processing, Food technology, Agriculture, Horticulture போன்ற துறைகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஎஸ்சி, பி.இ. அல்லதுஆ பி.டெக்,. முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 2019, மே 01ம் தேதியின்படி வயது 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.28,150 முதல் ரூ.55,600

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ.800. எஸ்.சி மற்றம் எஸ்டி பிரிவினருக்கு தகவல் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.nabard.org இணையதளத்தின் மூலமே விண்ணப்பிக்க முடியும்.
முழுமையான விபரங்களுக்கு //www.nabard.org/auth/writereaddata/CareerNotices/0905192246Grade%20A-2019%20Advt.pdf பக்கத்தை பார்க்கவும்.
கடைசி தேதி, மே 26, 2019

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close