எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் : உடல்நலம் பெற அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

வாஜ்பாய் தற்போது செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

Atal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னர் வந்த செய்தி கீழே:

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடல்நலம் தேறி வர தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

வாஜ்பாஜ் உடல்நலம் :

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். சிறுநீரகப் பாதையில் நோய்த் தொற்று உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்காக, கடந்த 11 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருடைய உடல்நிலை கடந்த 24 மணிநேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளது என எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் தற்போது செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சுவாசித்து வருகிறார்.

மத்திய அமைச்சர்கள், பாஜகவினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.இந்நிலையில்,  தமிழக அரசியல் தலைவர்கள் பலரும்  வாஜ்பாய் உடல் நலம் தேறி  வர தங்களது வாழ்த்து செய்திகளை  சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

1. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் :

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் உடல்நிலை மிகுந்த கவலையளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, அவர் விரைந்து நலம்பெற வேண்டுமென விழைகிறேன்”  என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றன.

2. தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

முன்னாள் பிரதமரும், அனைவரும் பெரிதும் நேசிக்கும் ஒப்பற்ற தலைவருமான வாஜ்பாய் உடல்நிலை மேலும் பின்னடைந்துள்ளது என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.அவர் நலம் பெறுவதுதான் நம் அனைவருக்கும் ஆத்ம பலம் தரும் என்பதுதான் உண்மை. அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்நேரத்தில் நாம் அனைவரும் கூட்டு பிரார்த்தனை நடத்துவோம்

3. பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close