சித்தா, யோகாவிற்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம்!

ஆயுஷ் அமைப்பின்கீழ் வரும் மருத்துவ படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமாகவே மாணவர்கள் நிரப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்காக சேர்க்கையின் தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆயுஷ் அமைப்பின் கீழ் வரும் ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்னை ஆயுஷ் அமைப்பு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் யஸோ பத் நாயக் கூறும்போது: ஆயுர்வேதா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யுனானி மற்றும் யோகா போன்ற துறைககளுக்கு உலகலவில் அதிக முக்கியத்துவம் உள்ளது. எனவே இந்த துறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதனால், இது போன்ற துறைகளில் உள்ள தரத்தை உயர்த்துவதற்கான தேவை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

×Close
×Close