/indian-express-tamil/media/media_files/2025/10/22/bar-council-of-tamil-nadu-2025-10-22-09-55-07.jpg)
Bar Council of Tamil Nadu Lawyers Insurance| National Insurance
தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களுக்காக ரூ.999 என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், நேஷனல் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் சமீபத்தில் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது:
"வழக்கறிஞர்களுக்காக பார் கவுன்சிலும், நேஷனல் காப்பீட்டு நிறுவனமும் இணைந்து இந்த புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். வக்கீல்கள் ஆண்டுக்கு ரூ.999 செலுத்தினால் போதும்.
விபத்தில் பலியானால் ரூ.25 லட்சம்
விபத்தில் உடல் உறுப்பு இழந்தால் ரூ.25 லட்சம்
விபத்து மருத்துவச் செலவுக்கு ரூ.3 லட்சம்
சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுக்கும்போது 50 வாரங்களுக்கு வாரத்திற்கு ரூ.6,000 வரை
என்று பல்வேறு இழப்பீடு தொகைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இந்த கூட்டு காப்பீட்டுத் திட்டம் அக்டோபர் 13-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. வழக்கறிஞர்கள் இந்தக் காப்பீட்டில் சேர பார் கவுன்சில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் சேருவதற்கான பிரீமியம் தொகையை வரும் நவம்பர் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us