Advertisment

ரூ.2.5 லட்சம் தக்காளி திருட்டு: வாணியம்பாடி தம்பதியை சுற்றுப்போட்ட பெங்களூரு போலீஸ்

பெங்களூரு அருகே சமீபத்தில் நடந்த தக்காளிக் கொள்ளை வழக்கில் மேலும் மூவரைத் தேடி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை கைது செய்துள்ளதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Bengaluru police arrest Tamil Nadu couple for robbing tomato-laden truck near city

பெங்களூருவில் தக்காளி திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தம்பதி

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஜூலை 8 ஆம் தேதி இரவு சிக்கஜாலாவில் இந்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில், லாரி டிரைவர் மல்லேஷ், கொள்ளை சம்பவம் குறித்து ஆர்எம்சி யார்டு போலீசில் புகார் செய்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் 2.5 டன் தக்காளியை எடுத்துச் சென்ற தனது பிக்-அப் டிரக்கை ஓட்டிச் சென்றதாகக் கூறினார்.

இவர் சித்ரதுர்காவில் உள்ள ஹிரியூரில் இருந்து கோலாருக்கு விளைபொருள்களை ஏற்றிக்கொண்டு இருந்தார்.

Advertisment

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோரகுண்டேபாளையம் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த மஹிந்திரா சைலோ கார் மீது தனது வாகனம் தவறுதலாக மோதியதாக மல்லேஷ் தனது புகாரில் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், உடனடியாக ரூ. 50,000 இழப்பீடு கேட்டனர், மேலும் மல்லேஷ் அவர்களுக்கு கொடுக்க முடியாததால், குற்றவாளிகள் அவரது லாரியை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில், இந்த சம்பவத்தை சாலை ஆக்கிரமிப்பு வழக்காகக் கருதிய போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்களையும் வாகனத்தையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட வாகனம் தமிழகம் வாணியம்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

200-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உள்ளூர்வாசிகளிடம் இருந்து தகவல்களைச் சேகரித்த போலீஸார், வெள்ளிக்கிழமை இரவு வாணியம்பாடியில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து தம்பதியை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.

அவர்கள், வாணியம்பாடியைச் சேர்ந்த எம்.பாஸ்கரன் (38) மற்றும் அவரது மனைவி சிந்துஜா (35) என்பது தெரியவந்தது.

மேலும், ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளியை தம்பதிக்கு திருட உதவிய ராகேஷ், மகேஷ் மற்றும் குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பாஸ்கர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bangalore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment