தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் ஆளுனர் ஆர்.என். ரவிக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்துக்கு மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் 144 பேர் ஆதரவு அளித்திருந்தனர். முன்னதாக அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்து விட்டனர்.
Advertisment
எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை ஆர்.பி. உதயக் குமாருக்கு வழங்கப்படவில்லை. இது மரபுக்கு எதிரானது என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இது தொடர்பாக தாம் பலமுறை விளக்கம் அளித்துவிட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதனால் அ.தி.மு.க.வினர் அவையில் கூச்சலிட்டனர். இதற்கிடையில் ஆளுனருக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. இந்த நிலையில் இன்று வானதி சீனிவாசன் சட்டப்பேரவைக்கு வரவில்லை.
Took a dip in the holy river Ganga today morning at Rishikesh and prayed for everyone’s well-being and happiness.
இதனால் அவர் எங்கே? என்ற கேள்விகள் எழும்பின. இந்த நிலையில் வானதி சீனிவாசன் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தாம் ரிஷிகேஷில் கங்கை நதியில் உலக மக்களின் நன்மைக்காக நீராடி வணங்கியதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ஜ.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“