Advertisment

இ.பி.எஸ் உருவப் படத்தை எரித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டம்; கூட்டணி தர்மம் மீறியதற்கு கண்டனம்

பா.ஜ.க-வில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பா.ஜ.க-வினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
bjp protest against EPS, Edappadi Palaniswami, Kovilpatti bjp protest, aiadmk, Tamilnadu, கோவில்பட்டி பாஜக போராட்டம், எடப்பாடி பழனிசாமி உருவப்படம் எரிப்பு, அதிமுக, பாஜக

பா.ஜ.க-வில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பா.ஜ.க-வினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

பா.ஜ.க-வின் ஐ.டி. விங் மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். சி.டி.ஆர் நிர்மல் குமார் பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

இதைத் தொடந்து, சி.டி.ஆர் நிர்மல் குமார் போலவே, பா.ஜ.க ஐ.டி விங் மாநில செயலாளர் திலீப் கண்ணன் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் இவரும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

பா.ஜ.க-வின் மாநில ஐ.டி விங் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்ததால் பா.ஜ.க-வில் அதிருப்தி எழுந்தது. அ.தி.மு.க பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டு, பா.ஜ.க மாநிலத் தலைமை மீது குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு பா.ஜ.க-வில் இருந்து விலகியவர்களை எப்படி அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ளலாம் என்று பா.ஜ.க-வுக்குள் கேள்விகள் எழுந்தது. இது கூட்டணிக்கு செய்கிற துரோகம் என்ற குரல்கள் பா.ஜ.க தரப்பில் சமூக ஊடகங்களில் எழுந்தன.

இந்நிலையில், பா.ஜ.கவில் இருந்து விலகிய நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பா.ஜ.க இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கூட்டணி தர்மத்தை மீறி பா.ஜ.க நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டதற்கு பா.ஜ.க-வினர் கண்டனம் தெரிவித்தனர்.

கோவில்பட்டியில் பா.ஜ.க இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப் படத்தை எரித்து செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Aiadmk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment