காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அன்புமணி வீட்டில் கருப்புக் கொடி!

அன்புமணி எம்.பி., வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட வேண்டும் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி. வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் விவகாரத்தில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுப்ரிம் கோர்ட் இறுதி தீர்ப்பை வழங்கியது. அதன் படி ஆறு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கெடு விதித்தது. கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கண்டித்துள்ளன. தமிழக அரசு தரப்பில், கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி எம்.பி., நேற்று வெளியிட்ட அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தி.நகரில் உள்ள அன்புமணியின் வீட்டு வாசலில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. காலையில் இருந்தே அவர் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

×Close
×Close