அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பதிவுகளை madurai.nic.in இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி முதல் ஜனவரி 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளை madurai.nic.in இணையதளம் மூலம் இன்று மாலை 5 மணி முதல் ஜனவரி 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 கிராமங்களில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும்.
டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டில் பங்கேற்க அனுமதி.
ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள்:
அவனியாபுரம்- ஜன, 14
பாலமேடு -ஜன, 15
அலங்காநல்லூர் -ஜன, 16
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“