பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் பங்கேற்றவர்கள், பொறியியல் கல்வியை விட்டு விட்டு மருத்துவக் கல்விக்கு சென்று விட்டால், காலியிடம் அதிகம் ஏற்படும் என்ற நிலை இருந்ததால் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் கால தாமதம் ஏற்படவே, நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 583 பொறியியல் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்கைக்கான கலந்தாய்வு வருகிற 17-ம் தேதி (நாளை மறுநாள்) தொடங்கவுள்ளது.

முதல் இரண்டு நாட்களான, ஜூலை.17 மற்றும் 18-ம் தேதிகளில் தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூலை 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்க்கும் நாள் 19 மற்றும் 20-ம் தேதியாகும். விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி நடைபெறவுள்ளது.

பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அனைத்து பிரிவினருக்குமான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதியுடன் முடிவடைந்து, வருகிற செப்டம்பர் 1-ம் தேதியன்று முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வின் போது மாணவர்கள் அழைப்பு கடிதத்தை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை கட்டண நிர்ணயக்குழு உயர்த்தி அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் இந்த ஆண்டு முதல் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close