கட்டணம் உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஓலா, ஊபர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, நாடு முழுவதும் கால் டாக்சிகளை பல ஆயிரக்கணக்கானோர் இயக்கி வருகின்றனர். இவர்களுக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் வழங்கும் சம்பளத் தொகை போதுமானதாக இல்லை என்றும், நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாகவும் ஓட்டுநர்களும் கார் உரிமையாளர்களும் புகார்களை தெரிவிக்கின்றனர். மேலும் பைக், டாக்சி முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கால் டாக்சி ஓடுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனை வலியுறுத்தி இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திங்கள், செவ்வாய் கிழமைகளில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதைத் அக்டோபர் 18ம் தேதி எலும்பூரில் அனைத்து சங்கங்களும் ஒன்றாக இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“