Advertisment

வெளியூர் மக்கள் சென்னையில் கைரேகை வைக்கலாமா? அதிகாரி பதில்

அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. அட்டைதாரர்களின் விவரங்கள் இதுவரை 63% குடும்ப சரிபார்க்கப்பட்டுள்ளன.

author-image
Jayakrishnan R
New Update
TN GOVT announce Incentives for ration shop workers Tamil News

சென்னையில் வசிக்கும் வெளியூர் நபர்கள் சென்னை ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ration Card | தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் படி, பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும்.

Advertisment

இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் அனுப்பியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறின்றி இப்பணியினைச் செய்திட அறிவுறுத்தப்பட்டு அவர்கள் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது பொருள்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகைப் பதிவு மூலம் புதுப்பிக்க வேண்டும்.

அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. அட்டைதாரர்களின் விவரங்கள் இதுவரை 63% குடும்ப சரிபார்க்கப்பட்டுள்ளன. 
மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் அவரவர்கள் வசதிக்கேற்ப விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இயலவில்லையெனில், இதற்கென தனி முகாம்கள் நடத்தவும், தேவைப்படின் வீட்டிற்கே சென்று புதுப்பித்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வாக்குறுதி அளித்துள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையில், “சில நாளிதழ்களில் குறிப்பிட்டிருப்பது போல் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.
கைவிரல் ரேகைப் பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது. வெள்ளைத் தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை. இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னையில் வசிக்கும் வெளியூர் நபர்கள் சென்னை ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்குப் பதிலளித்த அதிகாரி, “அவ்வாறு சாத்தியம் இல்லை. சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டும் இதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment