ஆலோசனை நடத்துவதற்கு ஆளுநருக்கு அதிகாரமே இல்லை என கூறிவிட முடியாது: தமிழிசை

ஆலோசனை நடத்தவே ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிவிட முடியாது என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன் .

ஆலோசனை நடத்தவே ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிவிட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால், தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், பின்னர் அமைச்சர் வேலுமணியை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், ஆளுநர் பன்வாரில்ல் புரோகித்தின் நடடிவடிக்கை அதிர்சியளிக்கிறது என்றார்.

இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தபோது: ஆளுநர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்வதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக் கொண்டு சர்ச்சையை ஏற்படுத்துவது என்பது தேவையில்லாதது. தனது அதிகாரத்திற்கு உட்பட்டு தான் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரியும். ஆலோசனை நடத்தவே ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கூற முடியாது என்று கூறினார்.

×Close
×Close