சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்தது ஏன்? அதிமுக ஆதரவு எம்எல்ஏ தனியரசு விளக்கம்

விற்கப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறதா என கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

By: Updated: June 20, 2017, 02:13:09 PM

இது தொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளரும் அதிமுகவின் ஆதரவு எம்எல்ஏ-வுமான தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாட்டிறைச்சியை உணவுக்காக உட்கொள்ளும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது. ஆடுகள், கோழிகள் மற்றும் மீன் போன்றவற்றை உண்பது என்பது மனிதனின் பாரம்பரிய உரிமை.

அப்படி இருக்கும் நிலையில், மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகளின் வருமானத்தை தடுக்கும் வகையிலும், துரோகம் செய்யும் வகையிலும் பாஜக- அரசு செயல்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் வகையில் மத்திய அரசின் சட்டம் உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வளர்க்கும் கால்நடைகளை எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அப்படி விற்கப்படும் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகிறதா என கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

ராஜஸ்தானில் இருந்து தமிழக அரசின் கால்நடைத்துறை கால்நடைகளை வளர்ப்புக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் வாங்கி வந்த போது, தமிழக அரசு அதிகாரிகள் அடையாள அட்டை வைத்திருந்தபோதும் கூட தாக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்படி கால்நடைகளை கொண்டு செல்பர்கள் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்தியாவில் ஒரு பாசிஸ சிந்தனையை பாஜக விதைத்திருக்றது.

எனவ,தமிழகத்தில் மத்திய அரசின் தடைக்கு எதிராக தமிழக அரசு ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cattle slaughter aiadmk support mla thaniyarasu walk out from tamilnadu assebly

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X