Advertisment

சென்னை விமான நிலையத்திற்கு வெளியே கடத்தப்பட்டாரா கடற்படை வீரர்?

சென்னை விமான நிலையத்திற்கு வெளியே வைத்து மூன்று பேர் கடத்தியதாக கூறிய நிலையில், சி.சி.டி.வி. காட்சியின் பதிவுகள் காவல்துறையினரை அதிர வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
CCTV footage outside Chennai airport contradicts Navyman’s version

 Mohamed Thaver 

Advertisment

CCTV footage outside Chennai airport contradicts Navyman’s version :  பால்கர் பகுதியில் கப்பற் படையைச் சேர்ந்த வீரர் சூரஜ்குமார் துபே தீக்காயத்துடன் மரணமடைந்தார்.  காவல்துறையிடம் அவர் கூறிய இறுதி வாக்குமூலத்தை காவல்துறையினர் சரிபார்ப்பு செய்து வருகின்றனர். அவர் கூறிய தகவல்களுக்கும் நடந்த நிகழ்வுகளுக்கும் இடையே பல்வேறு முரண்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவருடைய வாக்குமூலத்தில் சென்னை விமான நிலையத்திற்கு வெளியே மூன்று நபர்கள் தன்னை துப்பாக்கி முனையில் கடத்தி வெள்ளை  நிற காரில் கொண்டு சென்றனர் என்று அவர் கூறியிருந்தார்.  சென்னை விமான நிலையம் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.  ஜனவரி 30 தேதி அன்று அதிகாலை 12 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து துபே வெளியே வரும் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால் அவரை யாரும் கடத்த முற்படவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.  இது அவர் தன்னுடைய வாக்குமூலத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு 09:30 மணிக்கு வெளியேறியபோது கடத்தப்பட்டேன் என்று கூறியதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.

மேலும் படிக்க : நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை வளர்க்கும் ஆராய்ச்சியாளர் காட்வின் வசந்த்!

சென்னை விமான நிலையத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோதும் வெள்ளை நிற கார் எதுவும் அவர் அருகே வரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஜனவரி 30-ஆம் தேதி அன்று அவர் கடத்தப்பட்டதாக கூறியிருந்த நிலையில் 31ஆம் தேதி சென்னையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் ரூபாய் 5000த்தை எடுத்து உள்ளார் என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.  சிசிடிவி கேமராக்கள் மூலம் அவருடைய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்நிலையில் அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஜனவரி 30 இல் இருந்து ஒரு சில நாட்களில் 1,500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பால்கருக்கு எப்படி வந்து சேர்ந்தார் என்பது குறித்தும் அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஜார்கண்ட்டில் அவர் இருக்கும் போது சென்னையை சேர்ந்த அவருடன் பணியாற்றும் சக ஊழியர் போன் செய்துள்ளார் என்றும் அதில் சந்தேகம் அடையும் வகையில் ஒன்றும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவருக்கு ரூ. 5.45 லட்சத்தினை துபே தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு சந்தையில் முதலீடு செய்துருக்கும் துபேயின் பரிவர்த்தனைகள் குறித்தும் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

இதுவரையில் அவருடைய சக ஊழியரிடம் இருந்து ரூ. 5.45 லட்சம் வாங்கியுள்ளார். மேலும் வங்கியில் இருந்து ரூ. 8 லட்சம் மற்றும் தன்னை திருமணம் செய்து கொள்ள இருந்த பெண்ணின் உறவினர்களிடம் இருந்து ரூ. 8.5 லட்சம் அவர் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க : 9வது ஆண்டு யானைகள் புத்துணர்வு முகாம் கோவையில் துவக்கம்!

துபேவின் உடலை காவல்துறையினர் அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை அன்று அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. ஜார்கண்ட்டிலும் சென்னையிலும் காவல்துறையினர் தனித்தனிக்குழுவாக இந்த விசாரணையை மேற்ஒண்டு வருகிறனர். துபேவின் வாக்குமூலத்தின் படி, தன்னுடைய விடுமுறை நாட்கள் முடிந்து சென்னைக்கு ஜனவரி 30ம் தேதி வந்துள்ளார். அவரை கடத்திய கும்பல் அவரிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. அதனை அவர் தர மறுத்துவிட்டதால் கைகளைக் கட்டி அவரை ஒரு மலைப்பகுதியில் தீயிட்டு எரித்ததாக கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment