சென்னையின் விருந்தினர்களை வரவேற்கும் விதமாக, நகரின் நுழைவுவாயிலாக விளங்கும் சென்ட்ரல் ரயில்வே நிலையத்தின் வெளியில் சதுக்கம் அமைக்கும் பணி முடிவுக்கு வரவிருக்கிறது.
பெரியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓய்வெடுக்கும் இடமாகவும், விளையாடும் இடமாகவும் அமையவிருக்கும் இந்த சென்ட்ரல் சதுக்கம் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இங்கு, அழகிய செடிகள், நடைபாதைகள், புல்வெளிகள், ஓய்வெடுக்க விசுப்பலகைகள் மற்றும் கவர்ச்சிகரமான நீரூற்று போன்றவை அமைப்பதால், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
இது சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திற்கு மேலே உள்ள மூர் மார்க்கெட் வளாகம், விக்டோரியா ஹால் மற்றும் ரிப்பன் கட்டிடத்திற்கு மத்தியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் மக்களுக்கு ஓய்வெடுக்கும் இடமாக மட்டுமல்லாமல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த திட்டம், தற்போது முடிவிற்கு வரும் நிலையை எட்டியுள்ளது. ரிப்பன் கட்டிடம் மற்றும் விக்டோரியா ஹால்லிற்கு அருகில் இருக்கும் இடங்களை, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் (CMRL) 2012 ஆம் ஆண்டிலேயே நிலத்தடியில் மெட்ரோ கட்டுவதற்காக பெற்றுக்கொண்டதாக கூறுகின்றனர்.
சென்ட்ரல் ரயில்வே நிலையத்தை அழகூட்டும் இந்த திட்டம், மக்களின் போக்குவரத்தை பெரிதும் பாதிக்குமோ என்று வருந்தி 2021 ஆரம்பத்தில் தெற்கு ரயில்வே துறை அனுமதியளிக்க மறுத்தனர். ஆனால் , இதே போன்ற திட்டத்தை ரிப்போன் கட்டிடத்திற்கு அருகில் வெற்றிகரமாக அமைத்தப்பின், சென்ட்ரல் நிலையத்திற்கு அருகே அமைப்பதற்கும் அனுமதி வழங்கினர்.
இங்கு 800 கார்களை நிறுத்துவதற்காக மூன்று நிலை நிலத்தடி பார்க்கிங் வசதி தற்போது கட்டுமானப்பணியில் இருக்கிறது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, சென்ட்ரல் ரயில்வே நிலையம், மாலை பஜார் சாலை ஆகிய பாதைகளை இணைக்கும் விதமாக நான்கு பாதசாரி சுரங்கப்பாதைகள் இந்த திட்டத்தில் அமைகிறது.
மேலும், இங்கு, அலுவலகம், பஜார், உணவகங்கள், பயணிகளுக்கு காத்திருப்பு அறை ஆகியவற்றைக் கொண்ட 20 மாடி கட்டிடம், சென்ட்ரல் பிளாசாவில் குறிப்பிட்டுள்ளதே இந்த திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil