தமிழ்நாடு மத்திய பல்கலைகழத்தில் தீபாவளி கொண்டாடத்தின்போது, வளர்க்கப்பட்ட ஹோமத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றன. இந்த பல்கலைகழத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை கொண்டாட்டம் எல்லா வருடமும் கொண்டாடப்படும்.
கடந்த 17ம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் யாகம் வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஹோமத்தில் துணை வேந்தர், கிருஷ்ணன் பங்கேற்றிருந்தார். மேலும் இந்த கொண்டாட்டத்தை யொட்டி ஜெய் ஸ்ரீராம் என்ற வாசகம் கொண்ட கோலங்கள் தீட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் இது பாஜக கொடியின் வண்ணத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஊடங்கள் கலந்து கொள்ள அழைப்புவிடுக்கவில்லை. துணை வேந்தர் இந்த ஹோமத்தில் பங்கேற்றது தொடர்பான, புகைபப்டங்களை பதிவிட்டு பல்வேறு மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பல்கலைகழத்தில் எப்படி நடத்தலாம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு எதிராக மாணவர்கள் அமைப்பு பல்கலைகழத்திற்கு முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளியை போல் ஏன் மற்ற பண்டிகைகளை கொண்டாடுவதில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இது தொடர்பாக இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“