/tamil-ie/media/media_files/uploads/2023/08/cats.jpg)
ஃபாக்ஸ்கான் இந்தியா ஆப்பிள் ஐபோன் ஆலையில் திருமணமான பெண்களை வேலை செய்ய அனுமதிக்கவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து தமிழ்நாடு தொழிலாளர் துறையிடம் இருந்து விரிவான அறிக்கை கேட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் புதன்கிழமை (ஜூன் 25, 2024) தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “ஃபாக்ஸ்கான் இந்தியா ஆப்பிள் ஐபோன் (Foxconn India Apple iPhone) ஆலையில் திருமணமான பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை என்ற ஊடக அறிக்கைகளை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம ஊதியச் சட்டம் 1976 இன் பிரிவு5, ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது.
இந்தச் சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதற்கும், நிர்வாகத்துக்கும் உரிய அதிகாரம் மாநில அரசே என்பதால், அதிலிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் வாசிக்க : Centre seeks report from Tamil Nadu over claims of married women denied work at Foxconn plant
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.