ஹரியானா ஐஏஎஸ் அதிகாரியின் மகளை கடத்த முயற்சி... பாஜக தலைவர் மகனை கைது செய்த போலீஸார்!

ஹரியான மநில பாஜக தலைவர் சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

ஹரியான மநில பாஜக தலைவர் சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
chandigarh-stalking-case1

ஹரியானாவில் ஐஏஎஸ் மகள் விவகாரத்தில், கடந்தல் முயற்சியில் ஈடுபட்டதாக பாஜக தலைவரின் மகனை போலீஸார் கைது செய்தனர்.

Advertisment

ஹரியானா மாநில அரசு உயரதிகாரியின் மகள் வார்னிகா குன்டு. கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு வேளையில் காரில் வந்தவர்கள் தன்னை வழிமறித்ததாகவும், நல்லவேளையாக நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக வர்னிகா குன்டு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனிடையே, ஹரியான மநில பாஜக தலைவர் சுபாஷ் பரலாவின் மகன் விகாஷ் பரலா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் குமார் தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்றபோதிலும், ஜாமினில் வெளிவந்தனர்.

மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதாகவும், நேரில் பார்த்தவர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த நிலையில், இது தொடர்பாக அவர்களுக்கு காவல்துறை தரப்பில் இருந்து சம்மன் அனுப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் காவல்நிலையத்தில் புதன்கிழமை ஆஜராகினர். அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில், கடந்த வாரம் செய்யப்பட்ட வழக்குப் பதிவை தீவிரப்படுத்தி கைது செய்தனர்.

இது தொடர்பாக அப்பெண்ணின் தந்தையும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வி எஸ் குன்டு கூறும்போது: நான் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, கைது செய்யப்பட்டவர்கள் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டு செல்வதைக் காண முடிந்தது. ஆனால், எனது மகள் தேசிய ஊடகங்களில் முகத்தை மறைக்காமல் இருகிறார் என்று தெரிவித்தார்.

ஹரியானா மநில பாஜக தலைவர் சுபாஷ் பரலா கூறும்போது, எனது மகன் இந்த வழக்கில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சட்டப்படி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: