மாமண்டூர்… செய்யூர்… கும்மிடிப்பூண்டி..! எங்கே அமைகிறது 2-வது விமான நிலையம்?

இரண்டாவது விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைய  உள்ளது.

By: January 6, 2021, 3:56:31 PM

Chennai 2nd Airport News In Tamil: சென்னையில்  இரண்டாவதாக  விமான நிலையம் ஒன்று அமையவுள்ளது. அதற்கான தொழில்நுட்ப ஆய்வு முடிந்த பிறகு விமான நிலையம் அமையும் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இரண்டாவது விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைய  உள்ளது. இதற்காக  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமண்டூர், செய்யூர் ஆகிய இடங்களும், திருவள்ளூர் மாவட்டம்  கும்மிடிபூண்டிக்கு அருகிலுள்ள நிலப்பரப்பும் தெரிவு செய்யப்பட்டுளது.

விமான நிலையம் அமையும் இடத்திற்கான  தொழில்நுட்ப ஆய்வு முடிந்த பிறகு  மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க  உள்ளது. அதன்பின்னரே  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது

விமான நிலையம் அமைப்பதற்கான ஏஜென்சியாக தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ)  செயல்பட உள்ளது. இதன் மூலம் சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவற்கும், விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான ஏல  அறிவிப்பை வெளியிடுவதற்குமான முழு பொறுப்பையும் பெற்றுள்ளது.   டிட்கோ இதற்கான ஏல அறிவிப்பை தொடங்க  கடந்த  ஆண்டு மார்ச் மாதம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா  தொற்றுநோய் பரவல் காரணமாக அந்த அறிவிப்பை ஒத்திவைத்தது.

இந்த விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் முதல் அனைத்து பணிகளும் 2024-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என
கூறப்படுகின்றது. மற்றும்  தற்போது அமையவுள்ள இரண்டாவது விமான நிலையத்தின் பயணிகளின் கொள்ளவு  1.5 கோடி என கணக்கிப்பட்டுள்ளது. ஆனால் கடந்த  நிதியாண்டில் இது 2.2 கோடி என கணக்கிடப்படது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mamandur cheyyur chengalpet and gummidipoondi where is going to be second airport in tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X