chennai after unlock chennai status : வந்தாரை வாழ வைக்கும் சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. தளர்வுகளுக்கு பிறகு சென்னை ரிட்டன்ஸ் பேக்.
மற்ற மாவட்டங்களை காட்டிலும் தலைநகரான சென்னையில் கொரோனா தாக்குதல் சற்று அதிகம் எனவே கூறலாம். ஊரடங்கு விதிமுறைகளும் சென்னையில் கட்டாயம் பின்பற்றப்பட்டது. இந்நிலையில், செப்டம்பட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும் தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
அதிலும் குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு தளர்வு, வழிப்பாட்டு தலங்கள் திறப்பு, அரசு பேருந்து இயக்க அனுமதி என புதிய தளர்வுகளால் சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது.நேற்றைய தினம் 161 நாட்களுக்கு பிறகு சென்னை சாலைகளில் பேருந்துகள் சென்றன.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/5-2.jpg)
சென்னைக்கு கடந்த 10 நாட்களில் 3.5 லட்சம் பேர் வந்து இருக்கிறார்கள். தினமும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 35000 பேர் வரை சென்னைக்கு வருகிறார்கள். முறையாக பாஸ் விண்ணப்பித்து இவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். இதனால் இந்த எண்ணிக்கையை எளிதாக கணக்கிட முடிகிறது. தென் மாவட்டங்களில் இருந்துதான் இப்படி அதிகமான பேர் சென்னைக்கு வருகிறார்கள்.சென்னையில் பொருளாதார ரீதியான செயல்பாடுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நிறுவனங்கள், அலுவலகங்கள் மீண்டும் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளது. இதனால் சென்னை விரைவில் மொத்தமாக மீண்டு எழும் என்கிறார்கள்.
நேற்று திறக்கப்பட்ட பூங்காக்களில் முதியவர்கள் வழக்கம் போல் நடபயிற்சி செய்ய தொட்ங்கினர். கோயில்களில் வரிசையில் சென்று பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். சுமார் 1,500 பக்தர்கள் மைலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பார்வையிட்டனர். ஒரே நேரத்தில் டிரிப்ளிகேனில் உள்ள ஸ்ரீ பார்த்தசாரதிசுவாமி கோவிலில் 400 க்கும் மேற்பட்டோர் வழிபட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2020/09/2.jpg)
அக்கம்பக்கத்து சந்தைகள் வாடிக்கையாளர்களுடன் சலசலத்தன. பெரிய ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றிலும் சென்னை மாநகராட்சி ஆய்வு செய்தனர். விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா எனவும் ஆராய்ந்தனர். பேருந்துகளில் மக்கள் பயணம் செய்ய தொடங்கினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil