Advertisment

பி.எஃப் 7 முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க உத்தரவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கடும் சோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

author-image
Janani Nagarajan
Dec 23, 2022 02:00 IST
பி.எஃப் 7 முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க உத்தரவு

கொரோனா பி.எப்.7 பரவுவதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் வைப்பதை குறித்து கலந்துரையாட உயர்நிலைக் கூட்டம் முடிவுசெய்தது.

Advertisment

அதை தொடர்ந்து, சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளிடம் சோதனை மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பயணிகளை தனிமைப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த புதிய மாறுபாட்டினால், நான்கு பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பதிவாகியுள்ளது. இதனால் தமிழக மற்றும் மத்திய அரசு தற்காப்பு நிலையில் செயல்படுகிறது. குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் BF.7 மாறுபாடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோவிட் வழக்குகள் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது.

#Chennai Airport #Chennai #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment