தமிழக பாஜக அலுவவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பார்சலில் வெடிமருந்து வந்ததால் பரபரப்பு!

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை தி நகரில் பாஜக தலைமை அலுவலகம் உள்ளது. இன்று வெடிமருந்துகளுடன் கூடிய பார்சல் ஒன்று அங்கு வந்துள்ளது. மேலும், மர்மநபர்களால் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இது குறித்து உடனே காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் உதவியுடன் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு உள்ளதா என தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், இந்த சோதனையில் எந்தவித வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும், வெடிமருந்து கொண்ட பார்சல் அனுப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி மர்மநபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close