Advertisment

எல்லைகளை மூடிய சென்னை: தனியார் ஊழியர்கள், கூலித் தொழிலாளர்கள் திணறல்

இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவடங்களில் இருந்து சென்னையில் பணி செய்யும் ஊழியர்களின் நிலை கடுமையாக பாதித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai chengalpattu kanchipuram thiruvallur full lock down, chennai lockdown news , chennai E-pass

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 30 நள்ளிரவு வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

Advertisment

இந்த நான்கு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுப்படுத்த இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் எல்லைப்  பகுதிகள் பூட்டப்பட்டன. இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவடங்களில் இருந்து பணிக்கு செல்லும் ஊழியர்களின் நிலை கடுமையாக பாதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், " சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் மட்டும் தான் இயங்க வேண்டும். அப்படி இயங்கும் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு தேவைப்படும் இ-பாஸ் நடைமுறை  அரசிடம் இருந்து பெற வேண்டும். ஆனால், சென்னையில் இயங்கும் பெருவாரியான தனியார்  நிறுவனங்கள்  இந்த இரண்டு நடைமுறையும் பின்பற்றவில்லை. இ. பாஸ் உள்ளவர் எப்போது போல் செல்லலாம் என்று தெரிவித்தார்.

இருப்பினும், சென்னைக்குள் வரும் பெரும்பாலான ஊழியர்களுக்கு இந்த கட்டுபாடு  கடுமையான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கையில், " கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, இ- பாஸ் இல்லாமல்  தான் சென்னை மாநாகராட்சி பகுதிக்குள் பயணித்து வருகிறோம்.வேலைகளுக்கு தனிப்பட்டோர் இ- பாஸ் வாங்க முடியாது. தனியார் நிறுவனங்கள் தான் இ- பாஸ் வாங்க வேண்டும். எந்த நிறுவனங்களும் முறையாக இந்த இ-பாஸ் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை" என்று தெரிவித்தனர்.

கடந்த 15ம் தேதி வெளியிட்ட வழிகாட்டுதலில், " ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 12 நாட்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படமாட்டாது. எனினும், தொடர் செயல்பாடுகள் உள்ள ((Continuous Process Industries) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ((Industries manufacturing essential commodities) உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment