சென்னையில் லஞ்சம் கேட்ட பெண் டிராஃபிக் போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்

புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ராணி சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ராணி சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Chennai woman Traffic police officer removed from service

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பள்ளிக்கரணையைச் சேர்ந்த பெண் இன்ஸ்பெக்டர் ஜி ராணி செவ்வாய்க்கிழமை பணியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Advertisment

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து மற்றும் தலைமையகம்) காமினி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.

புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ராணி சம்பந்தப்பட்ட வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.

பள்ளிக்கரணை போக்குவரத்து காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ராணி, பாதிக்கப்பட்டவர்களிடம் குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞரைச் சந்திக்கும்படி சொல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

Advertisment
Advertisements

இன்ஸ்பெக்டர் ராணி கூறும் வழக்கறிஞரை வழக்கில் தொடர்புடையவர்கள் சந்திக்காத பட்சத்தில் அந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் வந்தது.

மேலும் விபத்தில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இழப்பீடு பெறும்போது குறிப்பிட்ட தொகையை ராணி தரப்பில் லஞ்சமாகப் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக விசாரணையும் நடந்தது.

மேலும், அரசு வழங்கிய போலீஸ் வாகனத்துக்கு இன்ஸ்பெக்டர் ராணி, தனிப்பட்ட முறையில் பர்சனல் டிரைவரை நியமித்ததாகவும் அவர்மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய அவர் காவல் துறைத் தலைவரை ஒரு மனுவுடன் அணுக வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் தனது வழக்கை நிரூபிக்க வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: