ஹாய் கைய்ஸ் : ஹெரிடேஜ் வாக் – அடுத்து எந்த பகுதியிலப்பா நடக்கப்போகுது..

Hi guys : சிந்தாதிரிப்பேட்டை ஹெரிடேஜ் வாக் என்ற தலைப்பில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில், சிந்தாதிரிப்பேட்டையின் பாரம்பரியம் குறித்து, அங்கு வசிக்கும் மக்கள் மூலம் விளக்கப்பட்டது.

By: February 24, 2020, 1:23:08 PM

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்..

சென்னையின் பாரம்பரிய கட்டடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘மெட்ராஸ் இன்ஹெரிட்டட்’ என்ற அமைப்பு சார்பில், ‘சிந்தாதிரிப்பேட்டை ஹெரிடேஜ் வாக்’ நடத்தப்பட்டது. பாரம்பரிய மேலாண்மை, கலாசார பாரம்பரிய சுற்றுலா, பாரம்பரிய கல்வி மற்றும்விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.மெட்ராஸ் இன்ஹெரிட்டட், நகரத்தில் மறைந்து வரும் பாரம்பரியத்தை, மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறது. சிந்தாதிரிப்பேட்டை ஹெரிடேஜ் வாக் என்ற தலைப்பில், நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில், சிந்தாதிரிப்பேட்டையின் பாரம்பரியம் குறித்து, அங்கு வசிக்கும் மக்கள் மூலம் விளக்கப்பட்டது.

வரவேற்கத்தக்க முயற்சி

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

சுங்கச் சாவடிகளில், ‘பாஸ்டேக்’ வழிக்குள், டேக் இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சாதனை அல்ல சோதனை

கோடை துவங்கும் முன்பே, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பத்து, பதினைந்து நாளுக்கு ஒருமுறையே வினியோகிக்கப்படுவதற்கு, பகிர்மானம் சரியாக இல்லாததும், செயற்கைத் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளதும் காரணங்களாக கூறப்படுகிறது.

கண்டிக்கத்தக்கது..

சீனாவின் தற்போதைய நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிறுவனங்களுக்கு, வாராக் கடன் விதிமுறைகளில் சலுகைகள் காட்ட வேண்டும் என, நிதியமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏதாவது பார்த்து பண்ணுங்கப்பா..

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai chindhadiripet heritage walk art culture fastag

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X