சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர், கரண்சின்கா. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அப்போதைய கமிஷனரான ஜார்ஜ் மீது எதிர்கட்சிகள் தேர்தல் கமிஷனில் புகார் செய்தது. இதையடுத்து அவர் மாற்றப்பட்டு கரன்சின்கா கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏகே.விஸ்வநாதன் நியமிக்கப்படுகிறார் என்று சொல்லியுள்ளார்.
ஏகே.விஸ்வநாதன் கோவை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர். மேலும் சிபிஐயில் டிஐஜியாக பணியாற்றியுள்ளார். அதே போல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரியாகவும், உளவுத்துறை டிஐஜி, எஸ்.பி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும் பல ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு.
1. எம்.ரவி ஏடிஜிபி தலைமையிடம் சென்னை.
2. கரண்சின்ஹா ஏடிஜிபி யூனிஃபார்ம் சர்வீஸ்
3. சுனில்குமார் சிங் ஏடிஜிபி ஊர்காவல் படை
4. சாம்சன் துணை ஆணையர் செக்யூரிட்டி சென்னை
5. ஜெயகவுரி தலைமை பாதுகாப்பு அதிகாரி சென்னை மெட்ரோ ரயில்.
6. சரவணன் ( கோவை டிசி) தலைமையிட துணை ஆணையர் சென்னை
7. என்.மணிவண்ணன் துணை ஆணையர் போக்குவரத்து காவல் மதுரை
8. ஜெயஸ்ரீ தலைமை விஜிலென்ஸ் அலுவலர் போக்குவரத்து கழகம் சேலம்
9. கயல்விழி துணை ஆணையர் திருப்பூர்
10. எம் .துரை போக்குவரத்து துணை ஆணையர் கோவை
11. மஹேஷ்வரன் ஏ.ஐ.ஜி சட்டம் ஒழுங்கு சென்னை
12. திஷா மிட்டல் எஸ்.பி.பெரம்பலூர்
13. சோனல் சந்திரா எஸ்.பி சிவில் சப்ளை சி.ஐ.டி
14. ஆசியம்மாள் எஸ்.பி.குற்றப்பிரிவு சி.ஐ.டி. 3
15. சக்திவேலன் எஸ்.பி. தனிப்பிரிவு எஸ்.பி.சி.ஐ.டி
16. ஏ.ஜி.பாபு.சைபர் செல் சி.பி.சி.ஐ.டி