சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு; போலீசார் விசாரணை!

IIT-Madras Guest lecturer found dead on campus Tamil News: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவரின் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள சமப்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai city Tamil News: IIT-Chennai Guest Lecturer Found Dead On Campus

Chennai city Tamil News: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர்புரம் போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இறந்து கிடந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த உன்னி கிருஷ்ணன் என்றும், இவர் இஸ்ரோவில் பணிபுரியும் ரகு என்பவரின் மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இவர் வேளச்சேரியில் தங்கி ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் வேலைகளை செய்து கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உன்னி கிருஷ்ணனின் அறைக்குச் சென்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், “நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கே தெரியவில்லை. மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடித்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் பிடெக் முடித்த உன்னிகிருஷ்ணன், ஐஐடி மாணவர்களுக்கு புராஜெக்ட் அசோசியேட்டாக இருந்ததாகவும், சிறிய தண்ணீர் கேனில் பெட்ரோலை எடுத்துச் சென்று, தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கான தடயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், உன்னிகிருஷ்ணனுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city tamil news iit chennai guest lecturer found dead on campus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express