முதல்ல இந்த ஓட்டை சைக்கிள தூக்கி போட்டுட்டு ஒரு ஆடி கார் வாங்கணும்: இணையத்தில் பறக்கும் மீம்ஸ்

YouTuber Madan’s Wife Krithika’s Comment On Audi Car gets Hilarious Trolls In Social Media Tamil News: ‘ஆடி A6’ சொகுசு கார் இல்லை என்பதை கையில் எடுத்துள்ள நமது நெட்டிசன்கள் இணையத்தில் விதவிதமான மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Chennai city Tamil News: YouTuber Madan’s Wife Krithika’s Comment On Audi Car gets Hilarious Trolls In Social Media

Chennai city Tamil News: இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது யூடியூப் சேனலில் அவற்றை பதிவேற்றி பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்தி பேசிய யூடியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்த போலீசார் யூடியூபர் மதன் ஆபாசமாக பேசியதை பதிவேற்றியதன் மூலம் அதிக பார்வையாளர்களை ஈர்த்துள்ளார் என்றும், கோடி கணக்கில் வருவாய் ஈட்டியுள்ளார் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மதனின் மனைவி கிருத்திகா கை குழந்தையுடன் இருந்ததால் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம், மதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் மதனை ஒரு வருடம் பிணையில் வர முடியாத வகையில் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் வைக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரகம் வந்த பின்புதான் தனது கணவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அறிந்த மதனின் மனைவி கிருத்திகா காவல் ஆணையரை சந்திக்காமல் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மதன் கொரியன் வெர்ஷன் பப்ஜி கேம் தான் விளையாடினார் எனவும் தனது கணவரை பற்றி வேண்டுமென்றே நெகட்டிவ் கருத்துகள் சிலர் பரப்பி வருவதாகவும் கிருத்திகா கூறினார். மேலும், காவல்துறை கூறி உள்ளது போல் தங்களிடம் 2 சொகுசு பங்களாக்கள் மற்றும் 2 சொகுசு கார்கள் இல்லை என கூறிய கிருத்திகா, தங்களிடம் இருப்பது ஒரேயொரு ஆடி கார் மட்டுமே என்றும் அதுவும் சொகுசு கார் இல்லை என்றும் கூறி குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்தார்.

‘ஆடி A6’ சொகுசு கார் இல்லை என்பதை கையில் எடுத்த நமது நெட்டிசன்கள் தற்போது இணையத்தில் விதவிதமான மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

ஆடி கார் கம்பெனியை டேக் செய்துள்ள ஒருவர், ‘இதை கேட்டு ஆடி கம்பெனிக்காரனே ஆடி போயிருப்பான்’ என்றுள்ளார்.

மற்றொருவரோ ‘முதல்ல இந்த ஓட்டை சைக்கிள தூக்கி போட்டுட்டு ஒரு ஆடி கார் வாங்கணும்’ என்றுள்ளார்.

‘இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் அயிட்டம் ஒன்று உள்ளது என்ற வைகைப்புயல் வடிவேலின் டயலாகிற்கேற்ப இன்னும் பல மீம்ஸ்கள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai city tamil news youtuber madans wife krithikas comment on audi car gets hilarious trolls in social media

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com