scorecardresearch

சென்னை- கோவை வந்தே பாரத்: என்னென்ன வசதிகள்? நிற்கும் இடங்கள் எவை?

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ள சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலில் என்னென்ன வசதிகள் உள்ளன, இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு இடங்கள் எவை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai - Coimbatore Vande Bharat Express train, Chennai - Coimbatore Vande Bharat, Vande Bharat, சென்னை- கோவை வந்தே பாரத், சென்னை- கோவை வந்தே பாரத் ரயில், சென்னை- கோவை வந்தே பாரத் வசதிகள், சென்னை- கோவை வந்தே பாரத் நிற்கும் இடங்கள் , Chennai - Coimbatore Vande Bharat Express

பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ள சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலில் என்னென்ன வசதிகள் உள்ளன, இந்த ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு இடங்கள் எவை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, 2019-ம் ஆண்டு ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது.

வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜி.பி.எஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன.

இந்த வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.

இந்த வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இந்தியா முழுவதும் தற்போது 10 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவை முதன்முதலில் டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. 5-வது சேவை சென்னை – பெங்களூரு – மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில், சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து கோவைக்கான பயண நேரம் 6 முதல் 6.30 மணி நேரமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீட்ட வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai coimbatore vande bharat express train what are fecilities and stops stations