கொரோனா: மாநகராட்சி கட்டுப்பாட்டில் வரும் சென்னையின் முக்கிய பகுதிகள்!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து கொண்டே வருகிறது.

By: Updated: July 20, 2020, 08:58:21 AM

chennai corona updates : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. மேலும், 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 1407 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 19ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று குறைந்து கொண்டே வருகிறது.

சென்னையில் 204 பகுதிகள் பாதிக்கபட்ட பகுதிகளாக இருந்தன. நேற்றும் இன்றும் எந்த மாற்றமும் இல்லாமல் 196 தனிமைபடுத்தபட்ட பகுதிகள் உள்ளன என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.9 மண்டலங்களில், தொற்று குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 4 புள்ளி ஐந்து சதவீதமும், பெருங்குடியில் 3 புள்ளி 5 சதவீதமும், ஆலந்தூரில் 3 புள்ளி 3 சதவீதமும் அடையாறு மண்டலத்தில் ஒன்று புள்ளி நான்கு மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஒன்று புள்ளி ஒன்று சதவீதமும், மணலி மண்டலத்தில் பூஜ்யம் புள்ளி மூன்று சதவீதமும் என புதிய தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதே சமயம், மீதமுள்ள 9 மண்டலங்களில், தொற்று குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. திருவொற்றியூரில், ஆறு புள்ளி ஐந்து சதவீதமும், தண்டையார்பேட்டையில் ஐந்து புள்ளி இரண்டு சதவீதமும், வளசரவாக்கத்தில் 5 சதவீதமும் கோடம்பாக்கத்தில் 3 புள்ளி ஒன்பது சதவீதமும், தேனாம்பேட்டையில் ஒன்று புள்ளி ஒன்பது சதவீதமும், புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

அண்ணாநகர் மண்டலத்தில் 35 தெருக்கள் பாதிக்கபட்டு உள்ளன. மேலும் தண்டையார்பேட்டை மண்டலத்தில் 1 தெரு பாதிக்கபட்ட தெருவாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணாநகர், அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கத்தின் சென்னை மாநகராட்சி கொரோனா பரிசோதனையில் கூடுதல் கவனத்தை செலுத்த உள்ளது. இந்த பகுதிகள் மாநகராட்சி தொடர் கண்காணிப்பு கீழ் வரவுள்ளன. இந்த மண்டலங்களில் அடுத்த 1 வாரத்தில் தொற்றை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாநகராட்சி தயாராக இருப்பதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai corona updates chennai corporation under focus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X