ஹாய் கைய்ஸ் : காய்ந்த இலைகளுக்காக ஒரு தொட்டி – அசத்தும் சென்னை மாநகராட்சி

Chennai corporation : காய்ந்த இலைகள் குப்பை கிடங்கிற்கு செல்வது தடுக்கப்படுவதுடன், இயற்கை உரமாகவும் உபயோகமாகிறது.

By: Published: February 26, 2020, 12:39:56 PM

ஹாய் பிரெண்ட்ஸ், வாங்க நேரா நிகழ்ச்சிக்கு போயிருவோம்..

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளை, வீட்டு குப்பையுடன் சேர்த்து அள்ளுவது வழக்கம். குப்பை கிடங்கில், தீ கொளுந்துவிட்டு எரிய, காய்ந்த இலைகளும் ஒரு காரணம். இதனால், காய்ந்த இலைகளை தனியாக சேகரித்து உரம் தயாரிக்க, அடையாறு மண்டலத்தில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மண்டலத்தில் உள்ள, அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதியை உள்ளடக்கிய, 175, 176, 181 மற்றும் 182 ஆகிய வார்டுகளில், இலைகள் சேகரிக்க, 6 லட்சம் ரூபாய் செலவில், 100 கம்பி வலை தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மரங்கள் அதிகம் உள்ள தெருக்களில் அமைக்கப்பட்டு உள்ளன. சாலையை சுத்தம் செய்யும் துப்புரவு ஊழியர்கள், காய்ந்த இலைகளை மட்டும் சேகரித்து, தொட்டியில் கொட்டுவர்.அவை, லாரியில் அள்ளப்பட்டு, பூங்கா மற்றும் பொது இடங்களில் அமைக்கப்பட்ட இயற்கை உரம் தயாரிப்பு கூடத்திற்கு அனுப்பப்படும்.இதன் மூலம், காய்ந்த இலைகள் குப்பை கிடங்கிற்கு செல்வது தடுக்கப்படுவதுடன், இயற்கை உரமாகவும் உபயோகமாகிறது.

வரவேற்கத்தக்க முயற்சி…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கோவையில், 81 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்க, தேவையான நிலம் கையகப்படுத்த அளவீடு செய்து, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து விட்டால், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும். வேறு மாவட்டங்களில் இருந்து வருபவர்கள், நீலகிரிக்கு செல்வதாக இருந்தாலும், கேரளா செல்வதாக இருந்தாலும், கோவை நகர் பகுதிக்குள் வந்து, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி, வெளியேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அதனால், இரண்டு மணி நேரம் தாமதமாகிறது. நகருக்கு வெளியே, சுற்று வட்டச்சாலை அவசியமாகிறது.பாலக்காடு ரோட்டில் சுகுணாபுரத்தில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடியும் வகையில், 32.43 கி.மீ., துாரத்துக்கு, மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.

நல்லது…

மேலை நாடுகளில் ஒருவர் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், இலக்கியமும், தத்துவமும் அவர்களுக்கு கட்டாய பாடமாக உள்ளது. பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இலக்கியத்தையும், தத்துவத்தையும் கட்டாயமாக பயில வேண்டும்.ஒருவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, பொறியியல் வல்லுநராகவோ இருந்தாலும் அடிப்படையில் மனிதன் தான். மனிதனுக்குரிய கடமைகள் பல உள்ளன. ஒரு மனிதன் அடிப்படையில் தந்தைக்கு மகனாகவும், மனைவிக்கு கணவனாகவும், உடன் பிறந்தவர்களுக்கு சகோதரனாகவும், உற்றார் உறவினருக்கு சொந்தமாகவும், நண்பனுக்கு உண்மையாகவும் சமுதாயத்தில் பொறுப்புள்ள குடிமகனாகவும் கடமையாற்ற வேண்டி உள்ளது. அப்படி வெற்றிகரமாக சமுதாயத்தில் வாழ அவனுக்கு இலக்கியமும், தத்துவமும் பேருதவியாக இருக்கின்றன.

இலக்கியம் ஐக்கியம்

2020, மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராவிட்டால் ‘டோக்கியோ ஒலிம்பிக் 2020’ ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பரில், ‘கோவிட்-19’ எனும் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனிடையே, ஜப்பானின் டோக்கியோவில், ஜூலை 24 முதல் ஆக., 9 வரை ஒலிம்பிக் நடக்க உள்ளது. கொரோனா பரவலால், இது ரத்தாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முடியல…

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை நல்லதையே சிந்திப்போம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai corporation litter bank fire tokyo olympics coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X